கம்பத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை

கம்பம்: கம்பம் நகரில் சிக்னல் பகுதி நான்குமுனை சந்திப்பில் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் நேற்று வேகத்தடை அமைத்தனர். கம்பம் நகரில் குமுளியில் இருந்து வரும் வாகனங்களும், கம்பத்தில் இருந்து குமுளி, தேனி செல்லும் வாகனங்களும், நகரில் உள்ள ஓடைக்கரைத்தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம் வழியாக நகரில் உள்ள நான்குமுனை சந்திப்பான சிக்னலை வந்தடைகின்றன. இந்த சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் பொருட்டு, பழைய பஸ்நிலைய சந்திப்பில், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ ஞானபண்டிதநேரு தலைமையில் போலீசார் நான்குமுனை சந்திப்பில் நேற்று வேகத்தடை அமைத்தனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது….

Related posts

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்