கம்பத்தில் நகர் மன்ற கூட்டம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கம்பம், செப். 20: கம்பம் நகர் மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது, இதற்கு தலைவர் வனிதாநெப்போலியன் தலைமை தாங்கி தீண்டாமை உறுதிமொழி வாசித்தார். நகர் மன்ற கூட்டத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிக்கு பின் நகர்மன்ற உறுப்பினர்கள் சம்பத், முருகன், மாதவன், பரிதி, சாதிக்,சாபிரா, முருகன், மணிகண்டன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கேள்விகளுக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கவுன்சிலரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார். நேற்று நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஆணையாளர் வாசுதேவன், சுகாதார அதிகாரி அரசகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ், உள்ளிட்ட அலுவலர்கள் பதில் கூறினர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்