கமுதி அருகே ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் திறப்பு

கமுதி, ஆக.7: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பார்த்திபனூரில் நடைபெற்ற விழாவில், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

அப்போது பேரையூரில் புதிய ஆய்வக கட்டிடம் முன்பு நடைபெற்ற விழாவில், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், பேரையூர் ஊராட்சி தலைவர் ரூபி, துணைத் தலைவர் சுலைமான், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்த், மருத்துவ அலுவலர் டாக்டர் ஜஹானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் மற்றும் ஜெயமணி கலந்து கொண்டனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ கண்காணிப்பாளர் மெகராஜ்பானு, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ஆறுமுகம்,முனியசாமி மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்