கமுதியில் இன்று மின்தடை

 

கமுதி, ஜூலை 13: கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. கமுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ள இருக்கிறது. இதனால் கமுதி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர்,பார்த்திபனூர், பேரையூர், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம், பசும்பொன் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு