கமர்சியல் சாலை நடைபாதை பழுது தடுக்கி விழும் சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி, ஜூலை 2: கமர்சியல் சாலை நடைபாதை பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டு வருகிறது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர உள்ளூர் மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக பல ஆயிரம் மக்கள் நகரின் முக்கிய கடை வீதிகளுக்கு வருகின்றனர். குறிப்பாக, கமர்சியல் சாலையில் உள்ள கடை வீதிகளிலேயே எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், இந்த நடைபாைதயில் அமைக்கப்பட்டு இன்டர் லாக் கற்கள் ஒரு சில இடங்களில் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் தடுக்கி விழுகின்றனர். குறிப்பாக, சிறு குழந்தைகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. நடைபாதை உடைந்து பல மாதங்கள் ஆகியும் இதனை சீரமைக்காமல் நகராட்சி நிற்வாகள் உள்ளது.
எனவே, இந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை