கப்பல் பொருள் விற்பனை கம்பெனியில் தீ விபத்து: மூதாட்டி பத்திரமாக மீட்பு

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் குதுப் (60). இவர், தனக்கு சொந்தமான வீட்டில் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் விற்கும் கம்பெனி மற்றும் குடோன் வைத்துள்ளார். 3வது மாடியில் குடும்பத்துடன் வருகிறார். 2வது மாடியில் கம்பெனியும், கீழ்தளத்தில் குடோனும் வைத்துள்ளார். இங்கு கப்பலுக்கு பயன்படுத்தப்படும் பெட்ஷீட், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. கம்பெனி மேலாளராக நந்தகுமார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மற்றும் குடும்பத்துடன் கீழே இறங்கி வந்தனர். தீவிபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கினர்.இதுகுறித்து ராயபுரம் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ராயபுரம், உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் 3வது மாடியில் சிக்கி தவித்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ₹2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கப்பல் பொருள் விற்பனை கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்து ராயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!