கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் மற்றும் மோர், ரஸ்னா, ரோஸ்மில்க், சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 26 ஆண்டாக கோகுல் நியூஸ் ஏஜென்ஸி உரிமையாளர் ஜெ.ஏழுமலை மற்றும் தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர் சங்கம் இணைந்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு தொடங்கி வைத்தார். இதில், சங்க நிர்வாகிகள் நாச்சியப்பன், சுந்தரம், டில்லிபாபு, கோபிநாத், பாலாஜி, உலகநாதன், சங்கர், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.    …

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு