கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு

நாகர்கோவில், ஏப்.11: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாகர்கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியில் கட்டுநர் பிரார்த்தனையை பரமேஸ் கூறினார். அப்துல் காதர் பாஹிம் வரவேற்று பேசினார். காசிநாதன் தலைமை உரை நிகழ்த்தினார். செயலாளர் சந்திரசேகரன் அறிக்கை படித்தார். பழனிவேல், சரோஜா, சுஜா, அமுதா சுரபி, சந்திரா, பாத் திமா பீவி, கவிதா, ரெஜீஸ் மேரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் புதிய தலைவராக ராஜேஷ். செயலாளராக ஒய்ஸ்லி, பொருளாளராக அப்துல் காதர் பாஹிம், ஆலோசகர்களாக பால்டுவின் புரூஸ், தாமஸ் பிரேம் குமார், துணை தலைவராக சந்திரசேகரன், துணை செயலாளராக பரமேஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அகில இந்திய முன்னாள் துணை தலைவர் வேதானந்த் பதவி பிராமணம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பழனிவேல் கலந்து கொண்டார். விழாவில் கன்னியாகுமரி சென்டர் நிறுவன தலைவர் ஜஸ்டின் பால், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் அசோக் மேக்ரின், ஷைன் இந்தியா ஊழியங்களின் நிறுவனர் டாக்டர் பென்னட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்ற ராஜேஷ் ஏற்புரை வழங்கினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை