கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் 20 கல்லூரிகள் பங்கேற்ற பேச்சுபோட்டி

கன்னியாகுமரி, செப்.22: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத் தமிழும் என்கிற பேச்சுப்போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆண்டனி வித்யா ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகலில் பரிசளிப்பு விழா நடந்தது.

பின்னர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100 என்கிற நூல் வெளியீட்டு விழா நடந்தது. கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கன்னியாகுமரி மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தலைமை வகித்தார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். நூலாசிரியர் கவிமணிதாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை