கன்னிமார்தோட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றக்கோரி மனு

திருப்பூர், செப். 8: திருப்பூர் பெருமாநல்லூர் கன்னிமார் தோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘கன்னிமார்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையில் சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை போன்றவற்றை அமைத்து தனிநபர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இந்த வழிப்பாதை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருவது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வேண்டும். மீண்டும் பொதுப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’’ என அதில் கூறியிருந்தனர்.

Related posts

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் 2.0 திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்தரங்கம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?