Saturday, October 5, 2024
Home » கன்னட திரையுலக பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்

கன்னட திரையுலக பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்

by kannappan

* நடிகர்கள், தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி * அரசு மரியாதையுடன் நாளை உடல் அடக்கம்பெங்களூரு: கன்னட திரையுலக பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரின் மறைவு திரையுலகத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், தலைவர்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசு முழு மரியாதையுடன் நாளை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.கன்னட திரையுலக பவர் ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார் (46). நேற்று காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்ப டாக்டர் ரமணாவிடம் ெசன்றார். பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. டாக்டர் ஆலோசனையின் பேரில் காலை 11.30 மணிக்கு விக்ரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது இதயம் செயல்படாமல் இருப்பது தெரிந்தது.உடனடியாக வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனால், உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக மாரடைப்பு தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், புனித் ராஜ்குமார் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது சகோதரர்கள் சிவராஜ் குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் புனித் மனைவி அஷ்வினி ரேவந்தி உள்பட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். புனித் ராஜ்குமாரை காப்பாற்ற டாக்டர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால், எந்த முயற்சியும் பலன் அளிக்காததால், அவரது உயிர் பிரிந்தது. புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அஷ்வத் நாராயண், அரக ஞானேந்திரா, ஆர்.அசோக், முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்உள்பட கன்னட திரையுலகினர் மருத்துவமனைக்கு வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பகல் 3 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட திரையுலகின் முன்னணி கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர், மாலை 6 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கண்டீரவா உள்விளையாட்டு அரங்கிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி ெசலுத்தினர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்  என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், தாயார் பர்வதம்மாவின் சமதி அமைந்துள்ள இடத்தில், தாயார் கல்லறை பக்கத்தில் புனித் ராஜ்குமாரை அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். புனித் ராஜ்குமாரின் மூத்தமகள் திரித்தி ஜெர்மனில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவர் இறுதி சடங்கில் கலந்து ெகாள்ள வசதியாக நாளை மறுநாள் (ஞாயிற்று கிழமை) காலை உடல் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.வாழ்க்கை குறிப்புகன்னட திரையுலகில் முடிசூடா மன்னராக வாழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களால் கன்னட கண்மணி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட ராஜ்குமார் – பர்வதம்மா ராஜ்குமார் தம்பதியரின் மூன்றாவது மகனாக கடந்த 1975 மார்ச் 17ம் தேதி பிறந்தவர் புனித் ராஜ்குமார். அவருக்கு 5 வயது இருக்கும்போதே, தந்தை ராஜ்குமாருடன் குழந்தை நட்சத்திரமாக கன்னட வெள்ளித்திரையில் கால் பதித்தார். அப்போதே சொந்த குரலில் பேசி நடித்தது மட்டுமின்றி, நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்தார்.கடந்த 2002ம் ஆண்டு அப்பு என்ற திரைபடத்தின் மூலம் இளைஞராக வெள்ளித்திரையில் கால் பதித்தார். கடந்த 2002 முதல் 2021 வரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். மாநிலத்தில் புகழ் பெற்ற பெரிய இயக்குனர்கள் இயக்கிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நூறு நாட்கள் கடந்தும் திரையிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதரமாக மட்டுமில்லாமல் மாநில அரசின் பல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தும் விளம்பரங்களிலும் தூதராக நடித்துள்ளார்.அவருக்கு சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார், சகோதரி பூர்ணிமா ஆகியோர் உடன் பிறந்தவர்கள். கடந்த 1999 டிசம்பர் 1ம் தேதி சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த அஷ்வினி ரேவந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திரித்தி மற்றும் வந்திதா ஆகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருந்து சாதனைப் படைத்த புனித் ராஜ்குமார், தனது குடும்பத்தினரை மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான ரசிகர்களை விட்டு மறைந்துள்ளார்.மோடி பிரபலங்கள் இரங்கல்புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள்  கமல்ஹாசன், விஜயகாந்த், சோனம் சூட், மம்மூட்டி உட்பட கர்நாடகம், தமிழகம், கேரள மற்றும் இந்தி திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  …

You may also like

Leave a Comment

seventeen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi