கனமழை எதிரொலி: தமிழகத்தில் நவ.12, 13ல் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்வுகள் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. தற்போது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனால் வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 15ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக, தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை