கனமழையால் வேரோடு சாய்ந்த மரம்; வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாமியார்-மருமகள் படுகாயம்: குலசேகரம் அருகே பரபரப்பு

குலசேகரம்: குலசேகரம் அருகே அரியாம்பக்கோடு சானல்கரை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (45). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி. இந்த தம்பதிக்கு ஆகாஷ், அபிஷேக் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆகாஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2, அபிஷேக் பிளஸ்1 படித்து வருகின்றனர்.விஜயன் தனது மனைவி, மகன்கள், தாயார் லீலா (65) ஆகியோருடன் சானல் கரையோரம் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். வீட்டின் அருகே ராட்சத அயனி மரம் இருந்தது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த மரம் வேரோடு சாயும் நிலையில் இருந்தது.இந்தநிலையில் நேற்று இரவு விஜயன் உள்பட 5 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு சுமார் 11 மணி அளவில் அருகே இருந்த ராட்சத மரம் திடீரென்று வீட்டின் மீது வேரோடு சாய்ந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் அலறினர். ஆனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றிவிட்டு 5 பேரையும் மீட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய சரோஜினியும், லீலாவும் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜயன் மற்றும் அவரது 2 மகன்களும் காயமின்றி உயிர்தப்பினர். இந்த தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மரம் சாய்ந்து விழுந்ததில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை மற்றும் 3 புறாக்களும் இறந்துவிட்டன. அதேபோல் மரத்தின் கிளை விழுந்ததில் பக்கத்துவீட்டு மாடியில் உள்ள தடுப்புசுவரும் உடைந்து சேதமடைந்தது….

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்