கனமழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக தேசிய அடையாள அட்டை

நெல்லை, ஜன. 23:நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய நாட்கள் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தொலைந்து இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும், புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். டிச.29 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள் பழுதாகி இருந்தால் உரிய நிறுவனங்கள் மூலம் பழுது நீக்கம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு 9443174693 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்