கனடா ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

டொரான்டோ: கனடாவில் ரயில் நிலையத்திற்கு வந்தபோது இந்திய மாணவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ் (21). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் கனடா சென்றார். டொரான்டோவில் உள்ள கல்லூரியில் மார்க்கெட்டிங் மேலாண்மை துறையில் முதல் ஆண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழன்று மாலை செயின்ட் தாமஸ் நகரில் உள்ள டிடிசி ரயில் நிலையத்துக்கு கார்த்திக் வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்து கார்த்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாணவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்….

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது