கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

 

கந்தர்வகோட்டை, செப். 12: கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு பழுதாகி உள்ளதால் பயணிகள் இருட்டில் தவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மாலை வேளையில் பள்ளி விட்டு மாணவ, மாணவிகள், வேலை விட்டு வருவோரால் பேருந்து நிலையம் எப்போதும் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள உயர்கோபுர ஹைமாஸ் விளக்கு பழுதடைந்ததால் பஸ் நிலையம் கும்மிருட்டாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக ஹைமாஸ் விளக்கை பழுது நீக்குவதுடன், பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் எரிய செய்ய வேண்டும். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி