கந்தர்வகோட்டை பகுதியில் தைல மரக்காட்டில் திடீர் தீ

கந்தர்வகோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள குப்பையன்பட்டி, தச்சன்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 40 ஏக்கர் தைலமர காட்டில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனைப் பார்த்த இப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் நிலைய பொறுப்பு அலுவலர் அறிவழகன் தலைமையில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்.

இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார். மேலும் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வசிக்கும் ரவி என்பவரது கன்று குட்டி பெரும் பள்ளத்தில் விழுந்து தவித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட மக்கள் கொடுத்த தகவல் பேரில் வீரர்கள் விரைந்து சென்று கயிற்றை கட்டி உள்ளே இறங்கி கன்று குட்டி பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்கள். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு