கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் 2.0 திட்டம் தொடக்கம்

கந்தர்வக்கோட்டை, ஜூலை 3: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டியில் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் 2.0 (இரண்டாம் கட்டம்) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்சிற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் இல்லம் தேடி கல்வித் திட்ட 2.0 (இரண்டாம் கட்டம்) அக்கச்சிப்பட்டியில் தொடங்கி வைத்து பேசியதாவது:
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தற்போது அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சியை அடைந்து 2.0 என விரிவடைந்து உள்ளது. கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திற்கு 20 மையங்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டம் 2.0வில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மையங்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் மாலை நேரத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு தினந்தோறும் வருகை புரிய வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட அடிப்படை திறன்கள் அனைத்தும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தன்னார்வலரால் கற்பிக்கப்படுகிறது. மாலை நேரங்களில் வாசிக்கக்கூடிய வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் வழங்கி வருகிறது. மாணவர்கள் அதை சிறப்புடன் பயன்படுத்த வேண்டும். தொடக்க நிலை மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பிக்கப்பட்டு மாணவர்களுடைய அறிவுத்திறன் மேம்பாடு அடைந்துள்ளது.

கடந்த காலத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மையம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். மாலை நேரத்தில் மாணவர்களுடைய வருகையை இல்லம் தேடி கல்வி மைய செயலையில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வித் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் வாழ்த்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவி மலர்கொடி, வார்டு உறுப்பினர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்விஜாய், தன்னார்வலர் நித்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்