கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனிதசெபஸ்தியார் தேவாலய திருவிழா கொடியேற்றம்

கந்தர்வகோட்டை,ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் ஊராட்சியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு திருச்சிலுவை கொடியேற்று விழா நடந்தது. மங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் தேவாலயம் தமிழகத்தில் முக்கியமானதும், பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் கொடி மரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, தொடர்ந்து ஜெபிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட திருச்சிலுவை கொடியினை ஏற்றினர்.

கொடியேற்று நிகழ்ச்சியில் இப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து இக்கோயிலின் திருச்சிலுவை கொடி ஊர்வலம் மற்றும் திருத்தேர் பவனி விழா நடைபெற உள்ளது. அதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டு புனித செபஸ்தியாரை வழிபட உள்ளனர். மேலும் புனித செபஸ்தியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு மங்கனூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு