கந்தர்வகோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

கந்தர்வகோட்டை,ஜன.20: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கந்தர்வகோட்டை நகரில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயபால், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையேற்று பேரணியை நடத்தினர்.

மாணவர்கள் மித வேகம் மிக நன்று, சாலை விதியை மதிப்போம், இருசக்கர வாகனங்களில் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், கனரக வாகனங்கள் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவோம், மது அருந்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும், இருசக்கர வாகனங்களில் அரசு விதி முறைக்கு உட்பட்டு பயணிப்போம், வயது முதியோரை முடிந்தவரை மதிக்க வேண்டும் என முழக்கமிட்டனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செல்வகுமார், உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை