கந்தசாமி கோயிலில் சூரனை புதுப்பிக்கும் பணி தீவிரம்

ஆட்டையாம்பட்டி, நவ.17: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா, பங்குனி உத்திர விழா மற்றும் சூரசம்கார விழா நடைபெற்று வருகிறது. வரும் 17ம்தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. நாளை மாலை 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக கோயில் வளாகத்தில் சிங்கம், யானை, சூரன் ஆகிய சிலைகளை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரி சந்திரலேகா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி