கத்திரிக்காய் பின்சார் தொழில் நுட்பம்

மன்னார்குடி, ஜூலை 9: கத்திரிக்காய் பின்சார் தொழில்நுட்பம் குறித்து வேளாண் இணை பேராசிரியை கமலசுந்தரி கூறியது; பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதுவும் கத்திரிக் காய் காய்கறிகள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தை பெறுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரும்பாலானவை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே அதிகளவில் விளைகின் றன. ஏராளமான காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் பொ ழுது அவற்றின் விலை மிகவும் குறைந்து விடுகின்றன. மேலும் சரியான சேமிப்பு கிடங்குகள் பதப் படுத்து தல் வசதி இல்லாமையால் பெரும் சதவீதம் பயன்படாமல் கெட்டுப் போய் விடுகின்றன.

கத்திரிக்காய் அறுவடை பக்குவம்: கத்திரிக்காய் பத்து நாட்களில் இருந்து 40 நாட்களுக்குள் காய் பிடிக்க ஆரம்பிக்கும். ரகத்திற்கு தக்க மாறுபடும் பொது வாக கத்திரிக்காயின் விதைகள் பெரிதாவதற்கு முன் இதனை அறுவடை செய்ய வேண்டும் . இதனை அறிவதற்கு மேல் தோல் சற்று பல பல என்று மாறும் மற்றும் அது மிருதுவாகவும் இருக்கும் ஆனால் பருவம் மாறி விட் டால் அது துவர்ப்புத் தன்மை பெற்றுவிடும். தர நிர்ணயம் : கத்திரிக்காயின் மறுபெயர் முட்டை செடி இதன் பெயர் கா ரணம் முட்டை வடிவத்தில் இருப்பதனால் தான். ஆகையால் ஒரு கத்திரிக் காயின் தரம் அதன் முட்டை வடிவமான அமைப்பை வைத்து நிர்ணயம் செய்து விடலாம். வயலட் கத்திரிக்காய் என்றால் அந்த நிறம் ஒருசேர இருக்க வேண்டும். அதனுடைய காம்பு நன்கு பச்சையாக இருக்க வேண்டும்.

மாறுபட்ட சூழ்நிலையில் கத்திரிக்காய் பதப்படுத்துதல் : கத்திரிக்காய் அதிக பட்சமாக 5 நாட்கள் வரை சாதாரண வெப்பநிலையில் சேமிக்கலாம் 14நாட்கள் வரை குரைந்த வெப்பநிலையில் 10- 12 டிகிரி சென்டி கிரேட் வெப்பநிலையில் சேமிக்கலாம். மேலும் இந்த கத்தரிக்காயை தமிழ்நாடு வேளாண்மை பல் கலை க்கழக திரவமான டூட்டி பிரஸ் என்ற திரவத்தில் முக்கி எடுத்தால் இதனை பத்து நாட்கள் வரை சாதாரண வெப்ப நிலையில் சேமிக்கலாம். குளிர் சாதனப் பெட்டியில் 20 நாட்கள் வரை சேமிக்கலாம். இந்தத் திரவமா னது 20 மில்லி கலவையை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பயன்படுத் தவும்.

10 லிட்டர் 2 சதவீத ப்ரூட்டி பிரஸ் கலவையில் 5 கிலோ பழங் களை, காய்கறிகளை 5 நிமிடம் நினைத்து பின் 15 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும். அதே ப்ரூட்ஸ் கலவையை ஐந்துமுறை மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தலாம் எந்த ஒரு பழங்கள் மற்றும் காய்கறிகள் வாழ்நாளை நீட்டிக்க பயன்படுகிறது. காய்கறி தொழில்நுட்பத்துக்கு ஏற்ற காய் கத்திரிக்காய் இதனை பொடி செய் யலாம். ஊறுகாய் செய்யலாம் மற்றும் உலர வைத்தல் உலர வைத்து உப யோகிக்கும் முறை மிகவும் சிறந்த ஒன்றே ஆகும். சேமித்து நீண்ட நாட் களாக வைத்தால் இயற்கையில் உள்ளது போல் மனம் பெறலாம். இவ்வாறு இணைப் பேராசிரியை கமலசுந்தரி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை