கத்தியை காட்டி மிரட்டி விஏஓவிடம் செல்போன் பறிப்பு 3 பேருக்கு வலை

கிருஷ்ணகிரி, செப்.30: பர்கூர் தாலுகா, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் மல்லிகா(54). நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு, கந்திக்குப்பம் வரட்டணபள்ளி சாலை, பாளியப்பள்ளி அருகே டூவீலரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள், திடீரென மல்லிகாவை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும், நகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டினர். இதனால், திடுக்கிட்ட மல்லிகா கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அந்த வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், பாளியப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீதர்(25), வள்ளுவராயபுரம் சூரியபிரகாஷ்(25), பிரபாகரன்(27) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை