கதவணை பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

இடைப்பாடி, மே 18: மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய நீர் மின் கதவணை வழியாக பவானி, திருச்சி டெல்டா பாசனத்திற்கு செல்லும் பேரேஜ்களில் தண்ணீர் எப்போதும் மின்சார உற்பத்திக்காக தேக்கப்படும். கடல் போல் எப்போதும் தண்ணீர் இருக்கும். தற்போது குடிநீர் தேவைக்கு மட்டும் 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு கதவணையிலும் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்படும். பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில், கடந்த 4ம் தேதி, மின்சார உற்பத்திக்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இப்பகுதி முழுவதும் மணல்மேடுகள், பாறை திட்டுகளாகவும், குட்டை போல் தேங்கி உள்ளது. மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டு, விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பூலாம்பட்டியில் இருந்து இடைப்பாடி நகராட்சிக்கு, குடிநீர் மோட்டார் மூலமாக எடுக்கப்படுகிறது. தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. மேலும், பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பரிசல் மட்டும் செல்கிறது. எனவே, பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுவித்துள்ளனர். மேலும் இடைப்பாடி நகராட்சி நிர்வாகம், தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, காய்ச்சி குடிக்குமாறும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் தண்ணீர் சீராக கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்