கண்மாயில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?

 

காளையார்கோவில், ஜூன் 15: காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளக்கண்மாய் நகர்புறத்திற்கு மிக அருகே உள்ளது. இக்கண்மாயைச் சுற்றிலும் வீடுகள் அதிகளவில் உள்ளது. இக்கண்மாயில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் காளையார்கோவில் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் தீயிடுவதினால் துர்நாற்றம் வீசுவதாலும் புகை மூச்சை அடைப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றார்கள்.

இதுகுறித்து கடந்த ஆட்சி காலத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளிடமும் கூறியும் எந்த பயனும் இல்லை.
சமூகஆர்வலர் கூறுகையில், குப்பையால் சுவாசப் பிரச்னை, மர்ம காய்ச்சல், தொற்று நோய் பரவுதல் போன்ற பல்வேறு வியாதிகள் பரவும் சூழலில் பகுதி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ள இந்த குப்பை பிரச்னையை தற்போது உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்