கண்டாச்சிபுரம் அருகே காப்புக்காட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

கண்டாச்சிபுரம், மார்ச் 13: கண்டாச்சிபுரம் அருகே காப்புக்காட்டில் அழுகிய நிலையில் 70 வயதுமிக்க முதியவர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் காப்புக்காடு, பாக்கம் காடு சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் அடுக்கம் நாற்றாங்கல் அருகில் மெயின் ரோட்டில் சுமார் 100 மீட்டர் தொலைவில் நேற்று பிற்பகல் அழுகிய நிலையில் சடலம் ஒன்று உள்ளதை வனத்துறையினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்டாச்சிபுரம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற கண்டாச்சிபுரம் போலீசார், சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அருகில் உள்ள கிராமங்களில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்