கணியூர் டோல்கேட் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 553 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் -2 டிரைவர்கள் கைது

சோமனூர் : கணியூர் டோல்கேட் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 553 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பஸ் ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை வேனில் ஏற்றுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன், பாண்டியராஜன், ஞானவேல் மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் சென்று ஆம்னி பஸ்சில் சோதனையிட்டனர்.அப்போது பஸ்சில் பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக ஆம்னி பஸ் மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டைகளை ஏற்ற வந்த வேன் ஆகியவற்றை காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆம்னி பஸ் டிரைவர்களான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (36), மதுரையைச் சேர்ந்த செல்வம்(38) ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்த இம்ரன்கான் என்பவர் ஒடிசா மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை வாங்கி ஆம்னி பஸ்சில் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் கணியூர் டோல்கேட் அருகே ஆம்னி பஸ்சில் இருந்து வேனிற்கு புகையிலை பொருட்கள் மூட்டைகளை மாற்றும்போது போலீசில் சிக்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த 553 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் கடத்திய 2 டிரைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான வியாபாரியான இம்ரன்கான் மற்றும் அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பாபு ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது