கணவர் மீது துப்பாக்கிச்சூடு; 41 வயது பெண் கைது: 23 வயது கள்ளக்காதலன் சிக்கினார்

புதுடெல்லி; பஸ் டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானது. 23 வயது வாலிபருடன் இருந்த நெருக்கம் காரணமாக கணவரை கொல்ல முயன்ற 41 வயது பெண் கைது செய்யப்பட்டார்.தெற்கு டெல்லி ராணுவ காலனி பகுதியில் தனியார் பஸ் டிரைவர் பீம்ராஜ்(45) என்பவர் காரில் அமர்ந்து இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரால் சுடப்பட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளி வந்த பைக் மூலம் ஆய்வு நடத்திய போது கமலாநகர் பகுதியை சேர்ந்த லகான் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது கோவிந்தபுரியை சேர்ந்த ரோகன் என்கிற மணிஷ் பைக்கை வாங்கி சென்றது தெரிய வந்தது. சிசிடிவிகாட்சிகளிலும் பைக்கை பார்க் செய்து விட்டு ரோகன் ஹெல்மெட்டை கழற்றி விட்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் ரோகனை ைகது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட மோதலில் பீம்ராஜை கொலை செய்ய முயற்சி செய்தாக ரோகன் கூறினார். அதன்பின் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் பரிசோதித்த போது பீம்ராஜ் மனைவியான 41 வயது பபிதா அடிக்கடி ேபான் செய்து இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசாரித்த போது பபிதாவுக்கும், ரோகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கள்ளகாதல் இருந்து வந்ததும், இது வெளியே தெரிந்ததால் பீம்ராஜ் தனது மனைவி பபிதாவை அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ரோகன் உதவியுடன் பீம்ராஜை தீர்த்துக்கட்ட பபிதா திட்டமிட்டார். அதன் அடிப்படையில் நாட்டுத்துப்பாக்கி வாங்கி பீம்ராஜ்மீது ரோகன் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பபிதாவையும் போலீசார் கைது செய்தனர்.தொழிலாளி கொலையில் வாலிபர் கைதுதுவார்க்கா செக்டார் 13ல் வினோத் குமார்(45) என்பவர் மார்ச் 3ம் தேதி சடலமாக கிடந்தார். அவரது உடலில் எந்த காயமும் இல்லை. இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் கழுத்தை நெறித்து அவர் கொல்லப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணைநடத்தினர். வினோத்குமார் மனைவி செல்ேபானை ஆராய்ந்த போது அவர் இணையதள வணிகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் அர்ஜூன்(32) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்த விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலனியில் வசித்த போது அர்ஜூனுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், மார்ச் 2ம் தேதி நல்ல குடிபோதையில் இருந்த குமாரை துவார்க்கா டிடிஏ பூங்காவிற்கு அழைத்துச்சென்று கழுத்தை நெறித்து அர்ஜூன் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் மனைவி மற்றும் அர்ஜூனை கைது செய்தனர். …

Related posts

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு

சாலிகிராமத்தில் டேட்டிங் அப் மூலம் பாலியல் தொழில் நடத்திய அசாம் வாலிபர் கைது