கணவர், மாமியாருக்கு ஆயுள்

வில்லிபுத்தூர், ஏப். 14: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சின்னத்தாய் (51). இவரது மகன் ஜோதிமணி (27). இவர், கார்த்தீஸ்வரி (21) என்பவரை வரை 2வது முறையாக திருமணம் செய்தார். குடும்ப பிரச்னை தொடர்பாக கடந்த 2022 பிப்.5ம் தேதி சின்னத்தாயும், ஜோதிமணியும் சேர்ந்து கார்த்தீஸ்வரியை தாக்கினர். மேலும், ஆத்திரம் தீராமல் கார்த்தீஸ்வரி மீது மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த கார்த்தீஸ்வரி இறந்தார். இது தொடர்பான புகாரின்பேரில், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து சின்னத்தாய், ஜோதிமணியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜான்சி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி அம்மாள், ‘இளம்பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில் மாமியார் சின்னத்தாய், கணவர் ஜோதிமணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை