கணவன் விட்டுச்சென்றதால் விஷம்குடித்த இளம்பெண் தூத்துக்குடி ஜிஹெச்சில் அனுமதி

தூத்துக்குடி, பிப்.18: தூத்துக்குடியில் கணவன் விட்டுச்சென்றதால் விஷம் குடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மறவன்மடம், தம்பிக்கைமீட்டான் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவருக்கும் கன்னிமரியாள் (24) என்பவருக்கும் திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் திடீரென மதன், மனைவியை விட்டுச் சென்றார். இதனால் மனமுடைந்த கன்னிமரியாள் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார். இதுகுறித்து தெரியவந்ததும் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்