கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவின்படி, பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களிள் வீரத்தை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, வழிகாட்டுதலின் படி, சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைத்தல் என்ற தலைப்பின் கீழ், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டியும், காவலர்- பொதுமக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு