கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு; கீழடியில் அருங்காட்சியகத்தை அழகுபடுத்தும் பணி மும்முரம்: ஆகஸ்ட் மாதம் முதல்வர் திறந்து வைக்கிறார்

திருப்புவனம்: கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியக கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அலங்கார விளக்குகள் பொருத்துதல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஏராளமான பழங்கால கட்டுமானங்கள், தங்கம், தந்தம், சுடுமண், இரும்பு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், சுடுமண் பானைகள், எலும்புகள், முதுமக்கள் தாழிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கொந்தகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் கட்டும் பணி துவங்கியது. ரூ.11.3 கோடி ஒதுக்கீட்டில் 10 கட்டிடங்களுடன் சர்வதேச தரத்துடன் அருங்காட்சியகம் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. கட்டிடங்களின் உள் கட்டுமான பணிகள், அலங்கார விளக்குகள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை வைத்து அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. கீழடி அகழாய்வு பற்றிய ஒலி – ஒளி காட்சிக்கு என தனியாக அரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் கீழடிக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு, அருங்காட்சியக பணிகள் நிறைவடைந்ததும் ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். எனவே உட்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்