கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்க கேரளா முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாததால் நாளை முதல் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட உள்ளன.  ஆனால், கேரளாவில் மட்டும் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவில் தினசரி பாதிக்கும் நோயாளிகள் எண்ணிக்கையில் 55 சதவீதத்திற்கு மேல் கேரளாவில்தான் உள்ளது. தினமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், நோய் பரவல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை முன்னிட்டும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால், வரும் நாட்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதை தடுப்பதற்காக,  நாளை முதல் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது….

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு