கட்டணமில்லா பேருந்துகளில் 1,463.15 லட்சம் பெண்கள் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருப்பதாவது: அனைத்து பெண் பயணிகளுக்கும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளின் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 7,312 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் 12.7.21 முதல் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக பூஜ்ஜிய மதிப்பு பயணச் சீட்டுகளை பெண் பயணிகளுக்கு வழங்குகின்றன. 12.7.21 முதல் 26.8.21 வரை 1,463.15 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொத்த பயணிகளில் 60.70% ஆகும். இந்த இலவச பயண வசதி திருநங்கைகள் மற்றும் 40% மற்றும் அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை