கட்சி நிர்வாகம் சரியில்லை!: அதிமுக மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது… சசிகலா விமர்சனம்..!!

சென்னை: அதிமுக மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக சசிகலா விமர்சித்திருக்கிறார்.  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தன்னுடைய ஆதரவாளரான தேனி கர்ணனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய சசிகலா, கட்சியின் தற்போதைய நிர்வாகம் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். 
அடிமட்ட தொண்டர்களை நீக்குவது தவறான போக்கு என்றும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிகலா உரையாடியதாவது, நிச்சயமாக நான் வருவேன். தற்போது கடிதங்களை பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தமடைகிறது. இதன் காரணமாகவே நான் அனைவரையும் தொடர்பு கொண்டு உரையாடி வருகிறேன். நான் நிச்சயமாக வந்துவிடுவேன். என் கண் முன்னே கட்சி வீணாவை நான் இனி பார்த்துக்கொண்டு இருக்க போவதில்லை. 
ஏனெனில் அதிமுக மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கட்சியின் வேர்கள் தான் அடிமட்ட தொண்டர்கள். அவர்களை வெட்டுவது போன்று கட்சியில் இருந்து நீக்குவது அதிமுகவிற்கு நல்லதல்ல. முழுமையாகவே நிர்வாகம் தவறாக சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். சசிகலாவுடன் உரையாடும் அதிமுக தொண்டர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவது குறிப்பிடத்தக்கது. 

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்