கட்சி நிதியில் கைவரிசை திருவிக நகர் பகுதியில் வேட்பு மனு செய்யாத தேமுதிகவினர்

பெரம்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு வருகிறது பல இடங்களில் தேமுதிகவிற்காக நிற்க ஆட்கள் இல்லை. குறிப்பாக வட சென்னைக்கு உட்பட்ட திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 6 வார்டுகளுக்கும் தேமுதிகவில் நிற்பதற்கு ஒரு நபர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் ஐந்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். மற்ற இரண்டு வார்டுகளுக்கு போட்டியிட ஆட்கள் இல்லை.திருவிக நகரில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் எம்.பி.சேகர் என்பவர் நிறுத்தப்பட்டார் இவர் தற்போது திருவிக நகர் பகுதி செயலாளராக இருந்து வருகிறார். தேர்தலின்போது பல லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். கட்சி மேலிடமும் குறிப்பிட்ட நிதியை அளித்துள்ளதாம். ஆனால் அந்த நிதியில் ஒரு பகுதியை வேறுஒரு நிர்வாகி அவருக்கு தரவில்லையாம். இதனால் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையால் திருவிக நகர் தொகுதியில் ஒரு நபர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தற்போது கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடன் சுமை, மாநில தலைமை சொன்னபடி தேர்தல் செலவுக்கு பணம் தராது போன்ற காரணங்களால், தற்போது வார்டு கவுன்சிலருக்கு கூட ஆட்களை நியமனம் செய்ய முடியாத ஒரு தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சத்தியமங்கலத்திலும் யாரும் இல்லை: சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 142 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், தேமுதிக சார்பில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் நகரத்தில் உள்ள தேமுதிக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது,‘பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இணைந்துவிட்டதால் தற்போது தேமுதிகவில் கட்சியை வழி நடத்த நகர செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் இல்லை. இதனால் இந்த நகராட்சியில் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்றனர்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை