கட்சியில் ஒதுக்கப்பட்டதால் ஆத்திரம் தனி அமைப்பு தொடங்கினார் லாலு மூத்த மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருடைய  தம்பியான தேஜஸ்வி யாதவ் தான் தற்போது கட்சியின் பீகார் மாநில தலைவராக இருந்து வருகிறார். கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் எப்போதுமே ஓரம் கட்டப்பட்டு வருகிறார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர், கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, தனக்கு நெருங்கியவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்று, ‘லாலு ராப்ரி மோர்ச்சா’ என்ற புதிய  கட்சியை தொடங்கினார். பின்னர், அதை கலைத்து விட்டு மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு திரும்பினார்.ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாணவர் அமைப்பாக, ‘சாத்ரா ஆர்ஜேடி’ செயல்பட்டு வருகிறது. இதன் மாநில தலைவராக, தேஜ் பிரதாப்பின் நெருங்கிய நண்பர் ஆகாஷ் யாதவ் இருந்து வந்தார். இங்கு சமீபத்தில் நடந்த போஸ்டர் யுத்தத்தில், தனது புகைப்படம் இடம் பெறாததால் ஆகாஷ் யாதவின் பதவியை தேஜஸ்வி பறித்தார். இதனால் கோபமடைந்துள்ள தேஜ் பிரதாப், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைக்க `சாத்ரா ஜன்சக்தி பரிஷத்’ என்ற புதிய மாணவர் அமைப்பை தொடங்கி உள்ளார். இதன் மூலம், ஆர்ஜேடி.யின் கரங்களை வலுப்படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், லாலு குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், படிப்பறிவே இல்லாத தேஜ் பிரதாப், மாணவர்கள் அமைப்பை தொடங்கி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக பாஜ கிண்டலடித்துள்ளது….

Related posts

பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்

ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதில் உறுதி: புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களுடன் நடந்த பேச்சு தோல்வி

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை