கட்சித் தலைமை அறிவித்த முதல்நாளிலேயே விதிமீறலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம்: எதிர்க்கட்சியினர் சரமாரி புகார்

காஞ்சிபுரம்: வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்நாளிலேயே, ஆளுங்கட்சியை சேர்ந்த வி.சோமசுந்தரம், விதிமீறலில் ஈடுபட்டார் என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் உத்திரமேரூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே விதிமீறி நேற்று முன்தினம் இரவு, அண்ணா நினைவில்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள வி.சோமசுந்தரத்தின் சொந்த ஊர் உத்திரமேரூர் தொகுதியை சேர்ந்த மானாம்பதி. கடந்த 2011 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இதனைத் தொடர்ந்து 2016 தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை. மேலும் இவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி, வாலாஜாபாத் ஒன்றிய செயலாளராக இருந்து வாலாஜாபாத் கணேசனுக்கு வழங்கப்பட்டது.கட்சியில் ஓரங்கட்டப்பட்டு இருந்த சோமசுந்தரத்துக்கு, கடந்த ஆண்டு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டு, மாவட்ட செயலாளராக இருந்த வாலாஜாபாத் கணேசன் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் வி.சோமசுந்தரத்துக்கும், உத்திரமேரூர் தொகுதியில் வாலாஜாபாத் கணேசனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், காஞ்சிபுரம் தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால்  உத்திரமேரூர் தொகுதி வி.சோமசுந்தரத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம், நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து காஞ்சிக்கு வந்தார். பின்னர் அவர், தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இரவு 9 மணியளவில் தேர்தல் விதிகளுக்கு மாறாக, தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவில்லம் மாலை 6 மணிக்கு மூடப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டனர் என எதிர்க்கட்சியினர் புகார் எழுப்பியுள்ளனர். …

Related posts

டெல்லி புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்