கடையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உடும்பு மீட்பு

கடையம்,ஜூன் 27: கடையம் அருகே ஏ.பி. நாடானூர் கிராமத்தின் குமரன் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்தேக்கதொட்டியை சுத்தம் செய்வதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுத்துரை தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் சென்றனர். அப்போது தொட்டியின் உள்ளே உடும்பு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இறங்கி உடும்பை பத்திரமாக மீட்டு சிவசைலம் பீட் வாளையார் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை