கடையம் அருகே கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி சேர்ந்தவர் முத்தையா. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணறு மூலம் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கிணற்றில் காட்டுப்பன்றியின் அலறல் சத்தம் கேட்டது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர் ரமேஷ், வேட்டைத்தடுப்பு காவலர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 வயது உடைய ஆண் காட்டு பன்றியை சுருக்கு கயிறு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு வனத்துறையினர் சுருக்கு கயிறை ரிலீஸ் செய்தவுடன் காட்டுப்பன்றி வனப்பகுதியை நோக்கி ஓடிச் சென்றது….

Related posts

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு