கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை பெண் வியாபாரி உள்பட 6 பேர் கைது மார்த்தாண்டம் போலீசார் அதிரடி

மார்த்தாண்டம், ஆக.19: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நேற்று முன்தினம் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெட்டுமணி பகுதியில் பழ வியாபாரம் செய்யும் சிவகுமார் (45) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட 7 பாக்கெட் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வெட்டுமணி பகுதியில் டீக்கடை நடத்தும் ஜெகதீஷ் (72) என்பவரது கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 6 பாக்கெட் புகையிலை பொருட்களும், முழங்குழி பகுதியில் லிங்கேஸ்வரன் (52) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 42 பாக்கெட் புகையிலைப் பொருட்களும், நல்லூர் பகுதியில் ஹெப்சிபா (42) என்பவரது பெட்டிக்கடையில் இருந்து 6 பாக்கெட் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நட்டாலம் பகுதியில் வைகுண்ட மணி (45) என்பவரின் பழக்கடையில் பதுக்கி வைத்திருந்த 6 பாக்கெட் புகையிலை பொருட்கள், மார்த்தாண்டம் பகுதியில் அஜீஸ் (31) என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் பதுக்கிய 42 பாக்கெட் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவற்றை விற்பனை செய்த 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து