கடைகளில் உள்ள ஜி.பே., பே-டிஎம்களுக்கான கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி நூதன முறையில் பண மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது

துரைப்பாக்கம்: கடைகளில் உள்ள ஜி.பே மற்றும் பே-டிஎம்களின் கியூ.ஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி பண மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒக்கியம்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ தர் (32). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர், கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதர் தனது வங்கி கணக்கை சரி பார்த்தபோது, வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.3 ஆயிரம் தனது வங்கி கணக்கில் வரவு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரது கடையில் இருந்த கியூ.ஆர். கோடு ஸ்டிக்கர் மீது, வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதன்மூலம் நூதன பண மோசடி நடந்தது தெரிந்தது. விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (21) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதும், இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அடையாறு காவல் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் செலுத்தும் பணம் தனது வங்கி கணக்கிற்கு கிடைக்கும்படி கியூ.ஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி, மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றுவதாக போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஏராளமான கியூ.ஆர் கோடு ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்