கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க தனிக்குழு: மாவட்ட எஸ்பி தகவல்

 

திருவாடானை, மார்ச் 1: தொ ண்டி பகுதிகளில் கடல் வழியாக நடைபெறும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க தனிக்குழு அமைத்து கட்டுப்படுத்த நடவடிகை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சந்தீஷ் தகவல் திருவாடானையில் மாவட்ட எஸ்பி சந்தீஷ், நான்கு இடங்களில் சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தார். அப்போது அளித்த பேட்டியில், ‘‘திருவாடானை சப் டிவிஷனில் காலியாக இருந்த 50 போலீசார் பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் காலியாக இருந்த 165 போலீசார் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

திருவாடானை சப்டிவிசனை பொருத்தமட்டில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இல்லை. மணல் கடத்தல் தொண்டி போன்ற பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளன. இந்த கடத்தலை தடுக்கும் வகையில், இதற்கான தனி குழுக்கள் அமைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குண்டாஸ் ரவுடி இந்த சப் டிவிஷனில் அதிகமில்லை. இந்த பகுதியில் அதிகளவில் காட்டாறு உள்ளது. இதிலிருந்து வாகனங்களில் மணல் கடத்துவதை தடுக்கும் வகையில் மூன்று இடங்களை கண்டறிந்து செக்போஸ்ட் அமைக்கப்பட உள்ளது.

தேர்தல் சம்பந்தமாக 210 போலீசார் மாவட்ட அளவில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு புதன் கிழமையும் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதவிர வாரத்திற்கு இரண்டு சப் டிவிஷனில் கிராமங்களில் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார். பேட்டியின் போது திருவாடானை டிஎஸ்பி நிரேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை