கடலூர் முதுநகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர்: கடலூர் முதுநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது முதுநகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் பன்றிகள் சுற்றி வருகின்றன. இவை குப்பைகளில் கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு அங்கேயே படுத்துக் கொள்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடை நீரில் இறங்கி அங்கும் படுத்துக் கொள்கின்றன. மேலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை அச்சுறுத்தி வருவதால் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லவே அச்சமடைந்துள்ளனர். இதேபோல முதுநகர் சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு, கடலூர் முதுநகரில் சுற்றித்திரியும் பன்றிகள் மற்றும் தெருநாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ