கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

கடலூர், ஜூன் 22:கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர், சிறைக்கு தேவையான காய்கறிகள் வாங்குவது மற்றும் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். அவ்வாறு சென்ற இரண்டு தண்டனை கைதிகள் மற்றும் மூன்று விசாரணை கைதிகள் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகளை கடையில் வாங்கி தங்கள் தேவைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இதை பார்த்த சிறை காவலர்கள் இதுபோன்று எடுத்துச் செல்லக்கூடாது என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐந்து கைதிகளும் நேற்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா நேரடியாக சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மத்திய சிறைவளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு