கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணிக்கு பொறுப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்

 

கடலூர், ஆக. 13: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாணவரணி செயலாளர் எழிலரசன், எம்.எல்.ஏ அறிவிப்பின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும் மற்றும் பெண் துணை அமைப்பாளர் ஒருவர் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம். நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லூரி, டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவோ இருத்தல் வேண்டும். ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நகல் இணைக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும்.

இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால் அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக, முழுமையாக நிரப்ப வேண்டும். http://surl.li/mwoy என்ற இணையதளத்திலும், முகநூல் http://www.facebook.com/EzhilarasanCVMP டுவிட்டர் https://twitter.com/EzhilarasanCVMP மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருகின்ற 18ம்தேதி(வெள்ளிக்கிழமை) மாலைக்குள் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவர் அணி நிர்வாகிகளால் நடத்தப்படும். நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி