கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்

டெல்லி: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் நேற்று குளிக்க சென்றுள்ளனர். அப்போது தடுப்பணைக்கு அருகே ஏற்பட்ட சூழல் காரணமாக இரண்டு பேர் நீரில் மூழ்க, அவர்களை காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதில் 4 சிறுமிகள், 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் அடங்குவர். அதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளனர். மீட்டப்பட்டது சுமந்தா (18), பிரியா (18), நவநீதா (18), சங்கீதா (16), மோனிஷா (16), திவ்யதர்ஷினி (10), பிரியதர்ஷினி என்று தீயணைப்புத் துறையினர் அடையாளம் கூறியுள்ளனர்.  மீட்கப்பட்ட 7 போரையும் கடலூர் தலைமை பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அனைவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதாவது, ‘ கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த துக்க நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன’ என பதிவிட்டுள்ளார். மேலும் நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். …

Related posts

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல்முறையீடு?

வயநாடு நிலச்சரிவு பலிக்கு பசுக்களை கொன்றதே காரணம்: பாஜ மூத்த தலைவர் சர்ச்சை

ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தகவல்