கடலூரில் அதிமுக பேனர்கள் அகற்றம்

 

கடலூர், செப். 17: சுதந்திரப் போராட்டத் தியாகி முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் கடலூர் கடற்கரை சாலையில் உள்ளது. ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கடற்கரை சாலை மற்றும் மணிமண்டபம் முன்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் திடீரென்று அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற வந்தனர்.

இத்தகவல் அறிந்த மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடற்கரை சாலை முகப்பு பகுதியில் திரண்டனர். பின்னர் போலீசாரிடம் பேனரை அகற்ற கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடற்கரை சாலை முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றாமல் விட்டனர். மணிமண்டபம் முன்பு வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க .பேனரை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேனர்கள் வைப்பு தொடர்பாக புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முனையனூரில் மகளிர் குழுவினருக்கு புத்தாக்க பயிற்சி

கரூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நல சங்க ஆலோசனைக் கூட்டம்

கரூரில் போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கத்தினர் வாயிற்கூட்டம்