கடம்பூர் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்தது

 

சத்தியமங்கலம், ஜூலை 21: கடம்பூர் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம், ஹாசன் பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஹாசன் பகுதியை சேர்ந்த யோகேஷ் (42) என்பவர் ஓட்டினார். மேலும் 3 தொழிலாளர்கள் லாரியில் உடன் இருந்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கானக்குந்தூர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திக்கரை என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம்பட்ட 4 பேரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜமாபந்தி நிறைவு விழா 235 பேருக்கு சான்றிதழ்கள்: கோட்டாட்சியர் வழங்கினார்

23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு

காஞ்சிபுரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 133 மனுக்களுக்கு உடனடி தீர்வு: எழிலரசன் எல்எல்ஏ பங்கேற்பு