Monday, July 1, 2024
Home » கடன் தொல்லைகள் போக்குவார் அங்காரகன்

கடன் தொல்லைகள் போக்குவார் அங்காரகன்

by kannappan

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும்தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதிலிருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செயலால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன்வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இருவருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.நவக்கிரகங்களில் செவ்வாய் அனைவராலும் வணங்கப்படுபவர் .அங்காரகன் என்றும் இவரை சொல்லுவார்கள் .கடன் தொல்லைகள் நீங்க அங்காரக பூஜை செய்வது மரபு. அங்காரக சதுர்த்தி அன்று விசேஷமாக பூஜை செய்தால் விநாயகர் கருணையும் செவ்வாயின் கருணையும் சேர்ந்து கிடைக்கும் .செவ்வாய் சித்திரம்  பழனி .மூர்த்தி : தண்டாயுதபாணி அங்காரக கவசம் அங்காரக: ஸிரோ ரக்ஷேத் முகம் வை தரணீஸுத: |கர்ணௌ ரக்தாம்பர: பாது நேத்ரே மே ரக்தலோசன: ||நாஸிகாம் மே ஸக்திதர: கண்டம் மே பாது பௌமக: |ரக்தமாலீ புஜௌ பாது ஹஸ்தம் ஸூலதரஸ் ததா ||சதுர்புஜோ மே ஹ்ருதயம் குக்ஷிரோகாபஹாரக: |கடிம் மே பூஸுத: பாது பாதௌ பௌமஸ்ஸதாமம ||ஸர்வாணி யானி சாங்கானி ரக்ஷேன்மே மேஷ வாஹன: ||(இங்கு ந்யாஸம் செய்ய வேண்டும்)ய இதம் கவசம் நித்யம் ஸர்வ ஸத்ரு விநாஸனம் |பூத ப்ரேத பிஸாசானாம் நாஸனம் ஸர்வஸித்திதம் ||ஸர்வரோக ஹரம் சைவ ஸர்வஸம்பத் ப்ரதம் ஸுபம் |புக்தி முக்தி ப்ரதம் ந்ரூணாம் ஸர்வஸௌபாக்ய வர்தனம் ||ருணபந்தஹரம் நித்யம் படேத் ஸ்ரத்தா ஸமன்வித: |அங்காரக ப்ரஸாதேன ஸகாமான் லபதே த்ருவம் ||ஸ்தோத்ர பாடம் து ஸங்குர்யாத் தேவஸ்யாக்ரே ஸமாஹித: |ரக்த கந்தாக்ஷதை: புஷ்பை: தூப தீபகுலோதனை: ||மங்களம் பூஜயித்வா து மங்களாஹனி பக்தித: |ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் சதுரோ த்வாதஸாதவா ||அனேன விதினா யஸ்து ஸர்வ ஸம்பத் ப்ரதாயகம் |வ்ரதம் ததேதத் குர்வீத ஸப்த வாரேஷ்வதந்த்ரித: ||தஸ்ய ஸஸ்த்ராண்யுத்பலானி வன்ஹிஸ்ஸ்யாத் சந்த்ர ஸீதல: |ந சைவ வ்யதயந்த்யேனம் ம்ருக பக்ஷி கஜாதய: ||மஹாந்ததமஸே ப்ராப்தே மார்தாண்ட ஸ்யோதயாதிவ |விலயம் யாந்தி பாவானி ஸக ஜன்மார்ஜிதானி வை ||நமாம்யங்காரகம் தேவம் ரக்தாங்கம் வரபூஷணம் |சதுர்புஜம் மேஷவாஹம் வரத் ச வராக்ருதிம் ||ஸக்தி ஸூல கதா ஹஸ்தம் ஜ்வாலாபுஞ்ஜோர்த்வ கேஸகம் |மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் ஸர்வ தைவேஷ்ட்ட ஸித்திதம் ||அனுஷா…

You may also like

Leave a Comment

16 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi